திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனைய குறிச்சிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (40). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் அவரது வீட்டில் அருகே உள்ள சுதாகர் என்பவருக்கும் இடையே மழை நீர் வடிவதில் முன் பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சுதாகர் ஜெயபால் காலில் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே பகை தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில், இன்று காலை பனைய குறிச்சி அருகே உள்ள வேணுகோபால் நகர் பகுதிக்கு சென்ற ஜெயபாலை வழிமறித்து சுதாகர் அவரது தம்பி உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் ஜெயபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுதாகர் தரப்பினரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம் என்பதால் சம்பவ இடத்தை திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments