திருச்சி மாவட்டம் மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜா (26). இவர் மணப்பாறை காய்கறி மார்க்கெட் அருகே செல்போன் கடை மற்றும் செல்போன் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். நேற்று கடையை மூடி விட்டு சென்று நிலையில் இன்று காலை கடை திறக்க வந்துள்ளார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூபாய் 20,000 ரொக்க பணமும் ஒரு லேப்டாப் மற்றும் 10 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
திருட்டு குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் மற்றும் திருட்டுப் போன பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என தெரிய வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments