திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் மேலத்தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வீட்டில் இருந்த பீரோவை பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்த இருந்த 32 பவுன் நகை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசாருக்கு ரவி தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது நீங்கள் சொல்லும் நகைகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய இயலாது. இருப்பினும் ஒன்பது, பத்து பவுன் நகைகளுக்கு வழக்குப்பதிவு செய்து நகைகளை நாங்கள் மீட்டு தருகிறோம் என தெரிவித்ததாகவும்,
திருட்டு போன நகைகளுக்கான உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை போலீசாரிடம் ஒப்படைத்தும் பயனில்லை என கொள்ளை சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் ரவியின் மனைவி அமுதா தெரிவித்தார். பட்டபகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments