திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜீவ் நகர் பகுதியில் சதீஷ்குமார் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்தனர். இந்த வீட்டில் பொருட்கள் திருடு போகவில்லை,
இதே போல முத்துலெட்சுமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர். இந்த வீட்டில் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. இதனை அடுத்து வெங்கடேசன் என்பவரின் வீட்டில் உள்ளே நிறுத்தியிருந்த ஹோன்டா யூனிகான் ரூ.70,000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும், ராஜீவ் நகர் 5-வது கிராகி சில் சரவணன் என்பவரின் பர்னிச்சர் கடை வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6000 பணம் திருடப்பட்டது.
இதே பகுதியில் அருண் என்பவரின் வீட்டின் பூட்ட உடைத்துள்ளனர். இதில் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. இந்திரா நகர் பகுதியில் திருமாவளவன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று வெள்ளி காமாட்சி விளக்கை திருடி சென்றுள்ளனர். திருடர்கள் வீட்டில் திருடும் முன்பும், பூட்டை உடைக்கும் முன்பு வீட்டின் மாடியில் குடியிருக்கும் வீட்டின் வெளிப்புறத்தையும், அருகில் உள்ள வீட்டின் கேட்டின் வெளிப்புறத்தையும் பூட்டி விட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு யாரும் வந்து விடாமல் இருக்க யுக்தியை கையாண்டு உள்ளனர். இந்த திருட்டு குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments