திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணி கிராமத்தை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி 55 வயதான மாரிமுத்து. இவர் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊருக்கு அருகில் உள்ள கருப்பு கோவிலுக்கு சாமி குப்பிடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது கோவிலுக்கு சென்ற மின் இணைப்பு கம்பி கீழே அறுந்து கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக மாரிமுத்து மிதிக்கவே அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடித்துள்ளார். அப்போது அருகில் வயல் பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மாரிமுத்துவின் அண்ணன் அரவன் தம்பி துடிதுடிப்பதை பார்த்ததும் பதறிப்போய் அவரை காப்பாற்றுவதற்காக பிடித்துள்ளார். இதனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மின்சாரம் தாக்கி பலியான சகோதரர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
தம்பி மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடித்ததை பார்த்த அண்ணன் காப்பாற்ற முயன்ற சம்பவத்தில் சகோதரர்கள் இரண்டு பேரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments