Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 75 ஆண்டுகளாக மொபைல் சேவை கிடைக்காத இடத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அதிசயம் ஆச்சரியம்

திருச்சியில் 75 ஆண்டுகளாக மொபைல் சேவை கிடைக்காத இடத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அதிசயம் ஆச்சரியம் 

திருச்சி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் மொபைல் சேவைக்குமாறு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிஎஸ்என்எல் துணை பொது செயலாளர் விஜய பாஸ்கரன்…..

 திருச்சி பிஎஸ்என்எல் மண்டலத்தில் 4 ஜி நெட்வொர்க் கொடுப்பதற்கு தற்பொழுது அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 4ஜி சேவை பிஎஸ்என்எல் நிறுவன வழங்கும் என்றார்.ஐந்து மாவட்டங்களில் உள்ளடக்கிய பிஎஸ்என்எல் திருச்சி மாவட்ட சேவையில் 715 இடங்களில் டி.சி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து 4g நெட்வொர்க் சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

 

கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி மற்ற செல்போன் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியது. வாடிக்கையாளர்களுக்கு துயர சேதி. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி. கடந்த ஜூன் மாதம்(4500) நாலாயிரத்து ஐநூறு bsnl மொபைல் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 25ஆம் தேதி ஜூலை வரை 15500 பேருக்கு பிஎஸ்என்எல் மொபைல் சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனால் 3.875 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏற்கனவே பிஎஸ்என்எல் நெட்வெர்க்கிலிருந்து மற்ற நெட்வொர்க் மாறும் சதவீதம் 6.29 அதிகரித்து இருந்தது தற்போது 0.4 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

எண்ணிக்கையில் பார்க்கும் பொழுது 4000 பேர் மற்ற நெட்வொர்க்குக்கு மாறுபவர்கள் ஆகவும் 600 பேர் bsnl சேவைக்கு வந்ததாகவும் இருந்தனர்.தற்போது 4077 பேர் பிஎஸ்என்எல் சேவைக்கு வந்துள்ளனர்.1689 பேர்வெளியில் சென்றுள்ளனர்.

15,500 வாடிக்கையாளர்கள் தற்பொழுது பிஎஸ்என்எல் நெட்வொர்க் சேவைக்கு வந்துள்ளனர்.மூன்று மடங்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். 2ஜி 3ஜி சேவை வைத்திருக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு எவ்வித கட்டணம் என்று மாறி தங்களது சிம் காரை பெற்றுக் கொள்ளலாம்.

 திருச்சி மாவட்டத்தில் 300 பகுதிகளில் 4ஜி சேவை விரைவில் துவங்க உள்ளது. ஐந்து மாவட்டங்களில் 715 இடங்களில் ஃபோர் ஜி சேவை பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவை கொடுக்க உள்ளது.

மணப்பாறை கண்ணூத்து பகுதியில் 75 வருடமாக மொபைல் சேவை பயன்படுத்தப்படாத கிராமத்திற்க்கு 16.7.24 முதல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை துவக்கி வைத்துள்ளோம். பச்சமலையில் 2 இடங்களில் 4g சேவை கொடுக்கப்பட்டுள்ளது.

துறையூரில் 16 பகுதியில் பணி நடைபெறுகிறது.

வால்பாறை பச்சமலை கொல்லிமலை சபரிமலை உள்ளிட்ட கோயிலில் பிஎஸ்என்எல் சேவை மட்டுமே மொபைல் செய்ய மட்டுமே கிடைக்கிறது என்று பெருமை உள்ளது. எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பிஎஸ்என்எல் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.பேரிடர் காலங்களிலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குகரம் கொடுத்துள்ளது என குறிப்பிட்டார்.பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி 4ஜி சேவை சரிவர கிடைக்காததால் வெறுப்புடன் இருந்தவர்களுக்கு இனிமேல் அது நிகழாது 4ஜி சேவை தடையின்றி பெறமுடியும் என்பதை உறுதிபட தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *