திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள தச்சன்குறிச்சி பகுதிக்கு நெல்லையிலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அப்போது உர மூட்டைகளை இறக்க நஞ்சை சங்கேந்தி காலனி தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி 40 வயதான பாண்டியன் லாரியின் பின் பகுதியில் அமர்ந்து வந்துள்ளார்.
தச்சங்குறிச்சி வந்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் 33 வயதான முத்துக்குமார் பின்னால் ஏறி பார்த்தபோது உர மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பாண்டியன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மூட்டை தூக்கும் தொழிலாளி இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments