திருச்சி முக்கொம்பு பேருந்து நிறுத்தம் அருகே நகரப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட நின்றது. பின்னால் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் வேகமாக வந்து தடுமாறி பிரேக் அடித்த பொழுது பின்பு வந்த அரசு பேருந்து கார் மீது ஏறி இறங்கி உள்ளது. காரில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். பேருந்து ஏறி இறங்கியதால் முழுவதும் நசிங்க காரில் இருந்து இறந்தவரையும், காயமடைந்தவர்களையும் மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஒரு பெண் மற்றும் ஓட்டுநர் படுகாயத்துடன் இருந்ததால் காரை உடைத்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு காவல்துறையினரும், பொதுமக்களும் அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்விபத்தால் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments