திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆசாத்ரோடு பகுதியில் பைபாஸ்ரோட்டில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற 4 லாரி டிரைவர்கள் வாகனங்களை ஓய்வு இடத்தில் நிறுத்திவிட்டு உறங்கினர்.
அங்கு வந்த மர்ம நபர்கள், லாரி டிரைவர்கள் அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் மாணிக்கராஜ் (29), திண்டுக்கல் மாவட்டம் காணப்பட்டி ராமர் (35), கன்னியாகுமரி மாவட்டம் மெய்க்கமண்டபம் ஜெபதாஸ் (43), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்துக்குமார் (42) ஆகிய 4 பேரின் 4 செல்போன்கள் மற்றும் ரூ.9 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
அதேபோல் கரட்டுபட்டி பகுதியில் பேக்கரிகடை அருகில் காரை நிறுத்தி குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த கேரள மாநிலம் மூயார்பகுதி உபேஷ் (30) வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments