தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதானல் அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் மற்றும் அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் கொடிகள் என அகற்றும் பணிகள் மும்பரமாக தொடங்கி உள்ளது. இதைபோல் தேர்தல் நடைமுறை தொடங்கி உள்ளது.
இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்கும் நாள் கூட்டத்தில் நேரடியாக ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்களது குறைகள் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் தங்களது புகார் மனுக்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு செல்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments