திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பிள்ளைமா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்… ஸ்வச் பாரத் திட்டத்தில் திருச்சி இடம் பெற்றது என்பதை சிறு பிள்ளைகள் கூட நம்பாது என்ற வகையில் திருச்சி குப்பை கூளங்களால் நிரம்பி காணப்படுகிறது.
மாநகரில் குப்பை தொட்டிகள் எல்லாம் இல்லாமல் பொது இடங்கள் சுகாதார சீர்கேடுகளால் நிரம்பி வழிகின்றன. நான் வெற்றி பெற்றவுடன் திருச்சி நகரை தூய்மையான நகராக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார். பின்னர் தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடையே ஆதரவு திரட்டினார்.
இந்நிகழ்வுகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, பாலக்கரை பகுதி செயலாளர் மண்டிசேகர் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments