மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.9ம் தேதி இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி பாஜக இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் தலைமையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலையை கண்டித்தும்,
உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டித்து திருச்சியில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து மேஜர் சரவணன் நினைவு தூவி வரை மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. இந்த மெழுகுவர்த்தி ஏந்தி நடந்த அமைதி ஊர்வலத்திற்கு பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இந்த அமைதி ஊர்வலத்தில் பேரன்பாடி மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments