திருச்சி திருவானைக்காவல் வடக்கு உள்வீதி பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவர் மங்கள் & மங்கள் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக் கடையில் டெலிவரி மேன் ஆக பணிபுரிகிறார். இவர் பொருட்களை டெலிவரி செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கும்பகோணத்தான் சாலையில் வந்து கொண்டிருந்தார். அவர் பின்பு டெலிவரி வாகனம் வந்து கொண்டிருந்து.
திடீரென இரண்டு நபர்கள் போதையில் ஜெகனின் இருசக்கர வாகன கண்ணாடி மற்றும் வண்டியையும் உடைத்துள்ளனர். ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்ட போது வாக்குவாதம் முற்றி போதை உச்சத்தில் இவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை வைத்து அவர் தலையில் வெட்டி உள்ளனர். இதேபோல் அவ்வழியே வந்த ராஜராஜன் என்பவரது கார் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். ஸ்ரீரங்கம் போலீசார் இவர்களை தேடி வந்த நிலையில் பாயாசம் கார்த்தி தற்பொழுது போலீசிடம் சிக்கியுள்ளார்.
மற்றொருவர் லோகேஸ்வரன் என்பவரை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணைக்கு பிறகு கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் கஞ்சா போதையில் வழிப்பறி, கத்திக்குத்து அரிவாள் வெட்டு என சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்னதாக கழுத்தில் கத்தி முனையில் டாஸ்மாக்கில் கஞ்சா போதையில் இருவர் கொள்ளையடித்த சம்பவமும் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவங்களால் ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் இச்சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments