திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் நாகரத்தினம் மகன் பாண்டியன் (62). இவர் தனது குடும்பத்துடன் அரியலூரில் உள்ள ஒரு நிகழ்வில் பங்கேற்று விட்டு காரில் புள்ளம்பாடி வழியாக திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது புள்ளம்பாடி பெட்ரோல் பங்க் அருகே முன்னால் சென்ற டிராக்டரை கார் முந்த முயன்ற போது டிராக்டரின் பின்னால் கார் பலத்தமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி (83). கிருஷ்ணமூர்த்தி மனைவி ஜெயலட்சுமி (72 )ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காரில் பயணம் செய்த பாண்டியன் அவரது தாயார் ஆண்டாள் , பாண்டியன் மனைவி காமாட்சி ஆகியோர் படுகாயம் அடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் புள்ளம்பாடி தேரோடும் வீதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ரவி (45) என்ற டிராக்டர் டிரைவரை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments