திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் அருகே திருவரங்கம் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் கேரள பதிவு எண் கொண்ட சைலோ கார் ஒன்றில் இரண்டு பேர் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கார் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரை உடைத்து கொண்டு சுமார் 50 அடி கீழே விழுந்து ஆற்று மணலில் சொருகி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஆண் மற்றும் பெண் (கணவன் மனைவி) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
இந்த விபத்து குறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் கிரெயின் உதவியுடன் இறந்தவர்களின் உடலையும் அந்தக் காரையும் மீட்டனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
அவர்களது உடைமைகளில் விமான நிலைய சீல் இருந்தது. மேலும் கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கலாம். கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி ஆய்வு மேற்கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தார்.
Comments