Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

16,870 பேர் மீது வழக்குப்பதிவு. திருச்சி மாவட்ட காவல்துறை நடவடிக்கை

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்-2வது அலை பரவுவதை தடுக்க 
திருச்சி மாவட்டம் சார்பாக பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய்தொற்றை தடுப்பதற்காகவும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தள்ளது.

ஊரடங்கு விதிகளை அமல்படுத்தும் விதமாக திருச்சி மாவட்டத்தில் எல்லை சோதனை சாவடி 20 இடங்களிலும், வாகனங்கள் சோதனை செய்யும் இடம் 16 இடங்களிலும், முக்கியமான 84 இடங்களில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டும் 30 இடங்களில் இருச்கர வாகனம் ரோந்து மற்றும் 15 நான்கு சக்கர வாகன ரோந்து அமைக்கப்பட்டுள்ளது. அதில் 800 காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உதவியாக சுமார் 300 ஊர்காவல்படை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றார்கள்.

பொதுமக்களுக்கு கோவிட்-19 சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கை செய்கின்றனர். மக்கள் நடமாட்டம் மற்றும் ஊரடங்ககு விதிகளை மீறுதல் சம்பந்தமாக ட்ரோன் மூலமாக அனைத்த இடங்களிலும் கண்காணிக்கப்படுகிறது.

இதுவரை திருச்சி மாவட்டத்தில் 16,262 வழக்குகள் மாஸ்க் அணியாததற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் மீது 608 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டைவிட்டு 
வெளியே வரமால் அரசு அறிவித்துள்ள ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென திருச்சி மாவட்ட கண்கானிப்பாளர் மயில்வாகணன் கேட்டுகொண்டுள்ளார்.

மேலும் அவசியமின்றி வெளியே சுற்றி திரியும் நபர்கள் மீதும், ஊரடங்கு விதிமுறைகளுக்கு எதிராக திறந்திருக்கும் கடைகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *