திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் தேர்தல் விதிமுறைகளை மீறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியுடன் வந்த சரக்கு வாகனத்தையும், சட்டத்திற்கு புறம்பாக பயணம் செய்த 10 பெண்கள் உள்பட மொத்தம் 16 நபர்களையும் 141 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் தேர்தல் பொறுப்பு அதிகாரி குமரகுரு தலைமையிலான பறக்கும் படையினர் (SST) கண்டோன்மென்ட் காவல் நிலையம் அழைத்து வந்து ஒப்படைத்தார். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருச்சி நீதிமன்றம் அருகே நாம் தமிழர் கட்சி பேனருடன் பிரச்சாரத்திற்கு ஆட்களை ஏற்றி கொண்டு வந்த டிராக்டரை மேற்கு தொகுதி தேர்தல் பொறுப்பு அலுவலர் பாத்திமா சகாயராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் பிடித்து அதில் பயணம் செய்த 5 நபர்களையும் திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து டிராக்டர் மற்றும் 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments