இந்து முன்னணி கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆறுமுகம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி உறையூரில் உள்ள கிங்ஸ்லிகிட்ஸ் கிளினிக்கு சென்று இருந்தார். அப்போது கழுத்தில் காவி துண்டும், கையில் ராக்கியும் கட்டியிருந்த ஆறுமுகத்தை பார்த்து நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்று மருத்துவர் கேட்டுள்ளார்.
அதற்கு நான் இந்து முன்னணியில் மாவட்ட செயலாளராக உள்ளேன் என்று ஆறுமுகம் பதில் அளித்துள்ளார். பின்னர் பிஜேபி கட்சியை குறித்தும், கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமர் குறித்து அநாகரிகமாக மருத்துவர் ஜெயராஜ் பேசியுள்ளார்.
இதனை சிகிச்சை பெற சென்ற ஆறுமுகம் தனது கைப்பேசியில் மருத்துவர் பேசியது குறித்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பாஜக கட்சி தலைவர்களையும், பிரதமர் மோடி பற்றி தரக்குறைவாக பேசிய கிங்ஸ்லி மருத்துவமனை மருத்துவர் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி கட்சியினர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து உறையூர் போலீசார் மருத்துவர் ஜெயராஜ் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments