தமிழ்நாடு முழுவதும் 50 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக திருச்சி ஜங்சன் இரயில்வே சந்திப்பு எதிரே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்கேற்றனர்.
அதில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பங்கேற்று , தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதில் பங்கேற்ற அதிமுக முக்கிய நிர்வாகிகள் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. IPC Sec 143, 151, 188, 283 சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல் ஐந்து அல்லது அதற்கு மேலான நபர்கள் அதை கலைக்க கட்டளையிட்ட பின்னர் கூடுவது பொதுப் பணியாளரால் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்படியாமை பொதுப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூராக கூடியதுஉள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments