திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ளது. பெருகமணி ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கிருத்திகா அருண்குமார். இவர் தி.மு.க.வை சேர்ந்தவர் இவர் உள்ளாட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்ற நாள் முதல் அந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு காரணமாக பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்தது.
இதனிடையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் துணைத் தலைவர் தன்னுடைய பதவி ராஜினாமா செய்யப் போவதாக ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அவர்களை சமாதானப்படுத்தி ஊராட்சி சிறப்பாக செயல்பட வழிவகை செய்தனர்.
இந்த நிலையில் ஊராட்சி மன்றத்தில், ஊராட்சி மன்ற தலைவர் தன்னுடைய அதிகாரத்தையும் பதவியை பயன்படுத்தி போலியான முறையில் சொத்து வரி ரசீது தயார் செய்தும் போலி அரசு முத்திரைகளை தயார் செய்து அதனை பயன்படுத்தியும் தனது அதிகாரத்தையும் பதவியையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறபடுகிறது.
மேலும் கிராம ஊராட்சி செயலாளர் கையெழுத்தையும், ஊராட்சி துணைத் தலைவர் மணிமேகலை என்பவரது கையெழுத்தையும் ,போலியாக போட்டு அரசு முத்திரையை போலியாக பயன்படுத்தியும் மோசடியாக ரசீதுகளை பயன்படுத்தி பணம் வசூலித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரியிடம் திருப்பராய்த்துறையை சேர்ந்த முத்துராஜ் என்பவர் புகார் கொடுத்ததற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக முத்துராஜ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஸ்ரீரங்கம் நீதிமன்றம் நடுவர் அவர்களின் உத்தரவுபடி பெருகமணி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் கிருத்திகா அருண்குமார் மீது பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது முதல் முறையாக போலி ரசீது போலி கையெழுத்தை பயன்படுத்தி பணம் கையாடல் செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments