திருச்சி மாவட்டம் முசிறி வேளாங்கநத்தம் சாலையில் மாணிக்கம் நகர் பகுதி சேர்ந்த சரவணன் (39). இவர் பழைய இரும்பு கடை மாணிக்கம் நகர் பகுதியில் நடத்தி வருவதாகவும், கடந்த 23 ஆம் தேதி காரில் வந்த நான்கு பேர் இரும்பு கடையில் இருந்த சரவணன் மற்றும் அவரது தந்தை கணேசன் (60), ஆகிய இருவரிடம் தங்களது தோட்டத்தில் உள்ள மின்சார மோட்டார் காணவில்லை அதை யாரேனும் உங்கள் கடையில் கொண்டு வந்து விற்பனைக்கு கொடுத்தார்களா என கேட்டு தகராறு செய்துள்ளார்.
சரவணன் மற்றும் அவரது தந்தை கணேசன் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முசிறிக் காவல் நிலையத்தில் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் முசிறி சேலம் சாலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன்களான கண்ணன் (45), ரமேஷ் (47) ஆகிய இருவர் மீது முசிறி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments