Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி மீது திருச்சியில் வழக்கு பதிவு

திருச்சி மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் அணி, துணை அமைப்பாளர் சீலா, வழக்கறிஞர், என்பவர் கொடுத்த புகாரின்படி, R.நடராஜ், இ.கா.ப. DGP ஓய்வு, சென்னை என்பவர் PDP என்ற வாட்ஸ்அப் குரூப்பில் தவறான, பொய்யான, போலியான செய்திகளை பதிவிட்டுள்ளார் என்றும், அதில் இந்துக்கள் வாக்களித்து தான் வெற்றி பெற வேண்டுமென்றால்,

அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குகளை பெறுமளவிற்கு திராவிட முன்னேற்ற கழகம் தரம் தாழ்ந்துவிடவில்லை என செய்தி சேனலில் வந்த்தாகவும், அந்த புகைப்படத்தை, PDP வாட்ஸ்அப் குரூப்பில் தமிழக முதல்வரின் புகைப்படத்துடன், பெயரையும் சேர்த்தும், screen shot பதிவையும் பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் TN Police ஆதரவுடன் இடிக்கப்பட்டுள்ளது என்றும், பொய்யான தவறான செய்திகளை பதிவிட்டு தமிழக அரசுக்கும்,  காவல் துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், மதக்கலவரங்களை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் பொருட்டும், பொது ஜன அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்டும் உள்நோக்கத்துடன் 

சமூக வலைதளங்களில் (X வலைதளம்) செய்தி பரப்பியதாகவும். மேற்படி R.நடராஜ், இ.கா.ப., DGP ஓய்வு, சென்னை என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண்..31/23 u/s 153 (A), 504, 505 (1) (b), 505 (1) (c), 505 (2) IPC r/w 66 D IT Act (2008) – மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *