Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் – தீர்வ விசாரணை நடைபெறும் விபரம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அம்மாபேட்டை, கொழுக்கட்டைக்குடி. அளுந்தூர், மாத்தூர், தொரக்குடி ஆகிய கிராமங்களில் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக தனி நபர் நேரடி பேச்சுவார்த்தை மூலம் பத்திர பதிவு செய்யப்பட்ட புல எண்கள் தவிர மீதம் உள்ள நிலங்களின் உரிமையாளர்களிடமிருந்து

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் கீழ் நிலம் கையகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக முதல் கட்டமாக நடைபெற்ற தீர்வ விசாரணைக்கு ஆஜராகாத நில உடைமைதாரர்கள் கீழ்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் மற்றும் தேதிகளில் நேரில் / முகவர் மூலம் ஆஜராகி மேற்படி நிலம் தங்களுக்கு உரிமையுடையது என்பதற்கான 

அனைத்து கிரய ஆவணம், வில்லங்கசான்றிதழ், பட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் இவ்வலுவலகத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தீர்வம் பிறப்பித்து இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீர்வம் விசாரணை நடைபெறும் விபரம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *