Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பாஜக 2 பேர் உச்சகட்ட போதையில் ஒருவரை தாக்கும் சிசிடிவி காட்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டீக்கடையில் நேற்று (24.12.2022) இரவு பாஜக வழக்கறிஞர் சரவணன் மற்றும் சிறுபான்மை அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமுவேல் லவ் ஜாய் ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் பாஜகவை சேர்ந்த இருவரும் மற்றொரு நபரை தாக்கியுள்ளனர். பதிலுக்கு அந்த நபரும் இருவரையும் தாக்கியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய அந்த நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் ஓடிய போது பின்னால் துரத்தி வந்த பாஜகவினர் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பி ஓடி வந்த நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்தார்.

இதில் பாஜக சிறுபான்மை அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமுவேல் லவ்ஜாய் காயமடைந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அமர்வு நீதிமன்ற காவல் ஆய்வாளர் சேரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பாஜகவை சேர்ந்த இரண்டு பேரும் உச்சகட்ட போதையில் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு இந்த மோதலுக்கான காரணம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உச்சகட்ட போதையில் ஒரு நபரை தாக்கியதாக பாஜகவை சேர்ந்த இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *