திருச்சி மேலப்புலிவார் ரோடு பகுதியில் பல்பொருள் அங்காடி, புத்தகக் கடைகள், எலக்ட்ரிகல் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல கடைகள் வரிசையாக உள்ளன. அங்குள்ள எலக்ட்ரிக்கல் கடை,புத்தக கடை மற்றும் ஒரு கடையின் ஊழியர்கள் இன்று காலை அந்த கடையை திறப்பதற்கு அங்கு வந்துள்ளனர். அப்போது அந்தந்த கடைகளில் ஷ்ட்டர் மற்றும் முன்பக்க கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டிருந்தது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்ததில் அங்குள்ள ஒரு கடையில் 2000 ரூபாய் பணமும்,மற்றொரு கடையில் 400 ரூபாய் பணமும் திருடப்பட்டது தெரியவந்தது. கடையில் குறைவான அளவு பணத்தை மட்டுமே கடை உரிமையாளர்கள் வைத்து சென்றதால் அதிக அளவு பணம் திருடப்படவில்லை.
அந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் அங்கு கடை வைத்துள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments