திருச்சி மாநகரில் அதிக அளவில் ஆவின் பால் பாக்கெட் டப்பாக்களை திருடி தூக்கி செல்கின்றனர். ஆவின் நிறுவனத்திலிருந்து திருச்சி மாநகரில் உள்ள ஆவின் முகவர்களுக்கு அதிகாலை 2 மணி போல் வேனிலிருந்து பால் பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகளை சாலையில் இறக்கி வைத்து விட்டு செல்கின்றனர்.
பின்னர் காலை 5 மணி போல் முகவர்கள் அந்த பெட்டிகளை எடுத்து பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து வருகின்றனர். முன்னதாக ஆவினிலிருந்து பால் பாக்கெட்டுகள் வேன்கள் மூலம் இறக்கி வைக்கும் பால் பாக்கெட் டப்பாக்கள் சாலை, தெருக்களில் வைத்து விட்டு செல்கின்றனர். பால் டப்பாக்களை முகவர்கள் எண்ணி பார்க்கும் போது டப்பாக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதுகுறித்து கண்டறிந்த போது சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது தான் இரண்டு பேர் இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதிகாலையை பயன்படுத்தி திருடர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு பால் பாக்கெட் வந்து இறங்கிய சிறிது நேரத்தில் திருடி செல்கின்றனர். கடந்த மூன்று தினங்களாக முதலாவதாக சுப்பிரமணியபுரத்திலும், இரண்டாவது நாளாக தென்னூரிலும், மூன்றாவது நாளாக பீமநகரிலும் பால் பாக்கெட்டுகளை அலேக்காக தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த பால் பாக்கெட்டைகளை யாரிடம் கொண்டு இவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இவர்களை கைது செய்ய வேண்டும் என ஆவின் முகவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். முக்கியமாக இரண்டு சக்கர வாகனத்தில் வரும் இருவர் அந்தப் பகுதியில் நோட்டமிட்டு யாரும் செல்லாது பொழுது ஐந்து பால் பாக்கெட் டப்பாக்களை (டிரே) எடுத்து தனது பின்னால் அமர்ந்திருக்கும் நபருடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
ஏராளமான திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பால் பாக்கெட்டையும் திருடும் சம்பவம் திருச்சியில் தொடர்ந்து நடைபெறுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments