Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் உலக இளைஞர் திறன் தின கொண்டாட்டம்

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் உலக இளைஞர் திறன் தினம்   கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட செயல் அலுவலர் K.I. ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் A.R. சிவராமன், தலைமையில் நிகழ்ச்சியானது நடைப்பெற்றது. தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு ITC நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

இயற்கை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி நடத்தப்பட்டது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்பளம் ஊறுகாய் மசாலா பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டு பயிற்சி நிறைவு பெற்றனர். அந்த நபர்கள் இணைந்து “அற்புதம்” எனும் பெயரில் ஜவ்வரிசி வடகம் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

அனைத்து செயல் அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இளம் வல்லுநர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மணிகண்டம் வட்டாரத்தின் வட்டார அணித்தலைவர் மற்றும் திட்ட செயலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *