திருச்சிராப்பள்ளி மாவட்டம். காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காடுவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில், மேற்படி கிராமத்தை சேர்ந்த பிரேம்ஆனந்த் (35) S/o சுப்பிரமணி (முத்துராஜா) என்பவர் நேற்று (28.04.2024)-ம் தேதி மேற்படி விநாயகர் கோவில் அருகில் உள்ள நீர்தேக்க தொட்டியில் குளிப்பதற்காக, தனது செல்போன் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வைத்து விட்டு குளித்துவிட்டு வந்து பார்த்தபோது காணவில்லை எனவும்,
அந்த ஆத்திரத்தில், மது போதையில் அங்கிருந்த நவகிரக சிலைகளை கட்டையால் அடித்ததில் ஆறு சிலைகள் உடைந்துவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக, காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நவக்கிரக சிலைகளை சேதப்படுத்திய நபரை கைது செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments