திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராயப்பன் மனைவி முத்து(30). இவர் அருகே உள்ள வளநாடு கைக்காட்டி பகுதியில் செல்போன் மற்றும் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இரவு முத்து கடையை பூட்டி சென்ற நிலையியல், காலையில் கடை திறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து முத்து மற்றும் அவரது கணவர் ராயப்பன் ஆகியோர் கடைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கடையில் இருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கைப்பேசி மற்றும் உதிரி பாகங்கள், பெட்டிக்கடையில் இருந்த பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து முத்து அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments