Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் – உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவைத்தலைவர்கள் தேர்வு தர்மலிங்கம் அம்பிகாவதி.. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் ஆனந்த், டோல்கேட் சுப்பிரமணி, சேர்மன் துரைராஜ், சிவந்த லிங்கம் கருணைராஜா, மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் மயில்வாகனன், தொமுச குணசேகர் கருணாநிதி, கா ஜாமலை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

தீர்மானம் -1 : முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழகங்களில் கலைஞர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து, கழக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, மிகசிறப்பாக கொண்டாடுவது.

தீர்மானம் – 2 : 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டனி உருவாவதற்கு முழுமுதல் காரணமாக திகழ்ந்தவரும் தமிழகத்தில் திமுக மற்றும் தோழமைகட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிளும் பிரச்சாரம் செய்து மக்களின் மனதை கவர அயராது உழைத்த கழகத்தலைவர் தமிழக முதல்வர் தளபதிக்கு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகழகத்தின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் – 3 : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் தனது பிரச்சாரத்தின் மூலம் வேட்பாளர்களின் வெற்றிக்கு வித்திட்ட திமுகழகத்தின் இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகழகத்தின் சார்பில் தனது நெஞ்சார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் – 4 : தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாழ்த்திடும் வகையில் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் தளபதியின் முதல் மூன்று ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் – 5 : 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டனி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிகாக அயராது உழைத்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

இறுதியாக மத்திய, வடக்கு மாவட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழங்கினார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *