தமிழகத்தில் கையெழுத்து போட தெரியாத மக்களுக்கு “கற்போம் எழுதுவோம்” இயக்கமானது இன்று தொடங்கப்பட்டது. மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 40 இடங்களில் கற்போம் எழுதுவோம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதன் ஒரு பகுதியாக திருச்சி மணிகண்டம் ஒன்றியம் எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கையெழுத்து போட தெரியாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி மூலம் கையெழுத்து முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியை கற்பிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியானது சுமார் 150 நிமிடங்கள் நடைபெறும். நவம்பர், டிசம்பர்,ஜனவரி, பிப்ரவரி ஆகிய நான்கு மாதங்கள் பயிற்சி நடைபெறும். பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுருக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
Comments