Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

151 பதட்டமான வாக்குசாவடியில் 47 இடங்களில் மத்திய அரசின் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கபடுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசு

எனது வாக்கு எனது எதிர்காலம் ஒரு வாக்கின் வலிமை என்பதை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெறுகிறது. வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் போட்டியின் அட்டையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசு வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது…. தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் விழிப்புணர்வுகாக வினாடி வினா, பாட்டு போட்டி, விளம்பர போட்டி,   வீடியோ போட்டி என 5 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் சிறந்த வீடியோ திரைபடத்திற்க்கு முதல் பரிசு இரண்டு லட்சம். தொழில் சார்ந்த வகையில் 50 ஆயிரம், தொழில் சாராத வகையில் 30 லட்சம். பாட்டுப் போட்டியில் சிறந்த முதல் பரிசு ஒரு லட்சம் முதல் 50 ஆயிரம், 20 ஆயிரம் கொடுக்கபடுகிறது. விளம்பர வடிவமைப்பு 50,000 மற்றும் 30,000 பரிசு வழங்கப்படுகிறது.

தேர்தலின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மேலும் இதனை ஊக்குவிப்பதற்கு பரிசுத்தொகை வழங்குகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்று இடங்களில் மட்டும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யபட்டுள்ளனர். 1,262 வாக்கு சாவடியில்4 வாக்கு சாவடிகள் குறைந்து 1,258 வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 17ஆம் தேதி மாலை 6 மணியோடு இறுதி பிரச்சாரம் முடிவடைகிறது. ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சி என 20 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது உள்ளது. 151 வாக்கு மையங்களில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

1,258 வாக்கு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. பதட்டமான 151 வாக்குச்சாவடி மையங்களில் 47 இடங்களில் மத்திய அரசின் தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 151 வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் பணிபுரியக்கூடிய அனைவருக்கும், தேர்தல் பார்வையாளர்கள், காவல்துறை ஆகிய மூன்று துறையினருக்கும் தபால் வாக்கு பதிவு கொடுக்கப்படுகிறது. 2,100 தபால் வாக்குகள் விண்ணப்பம் வந்துள்ளது 15.02.22 மாலை 5.45 மணி வரை தபால் வாக்குகள் முடிவடைகிறது.

இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டதாக இதுவரை புகார் வரவில்லை. முகக்கவசம் அணியாதவர்களிடம் வாரம் வாரம் மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கிறோம். பிரச்சாரத்தின் போது முகக்கவசம் அணிய வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *