Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஜங்ஷன் மேம்பாலத்தில் மாற்றம், கட்டுப்பாடு – மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு

கடந்த (29.05.2023)-ந் தேதி ஜங்ஷன் உயர்மட்ட மேம்பாலம் போக்குவரத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டு, மன்னார்புரம் மற்றும் எடமலைப்பட்டி புதூரிலிருந்து வரும் வாகனங்கள் மட்டும் பாலத்தின் மேலே செல்லவும், திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம் மற்றும் இரயில்வே சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு பாலத்தின் கீழே செல்லவும் ஒருவழிப்பாதையாக அனுமதிக்கப்பட்டு வந்தது. 

அரிஸ்டோ உயர்மட்ட மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றும் பொருட்டு பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக பயணிக்க வேண்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் கள ஆய்வு செய்தும், கீழ்கண்டவாறு அரிஸ்டோ மேம்பாலத்தில் பயணம் செய்வதற்கு, (05.07.2023)-ந் தேதி முதல் வாகன ஓட்டிகள் இரு வழி பாதையாக வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

திண்டுக்கல் சாலை மார்க்கத்திலிருந்தும், மத்திய பேருந்து நிலையம் மார்க்கத்திலிருந்தும், எடமலைபட்டிபுதூர் செல்லும் வாகன ஒட்டிகள் பாலத்தின் மேல் ஏறி செல்ல அனுமதியில்லை. 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் (இலகுரக வாகனம் மட்டும்) மற்றும் பயணிகள் பேருந்துகள் ஆகிய வாகனங்கள் மட்டுமே பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதியில்லை. 

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இருவழிபாதையாக பயன்பாட்டில் உள்ள மேம்பால சாலையின் நடுவில் தொடக்கத்தில் இரும்பு பேரிகாட்ஸ் (Iron Barricades) அமைத்தும், அதன்பின்னர் பிளாஸ்டிக்கால் ஆன Pollard அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் திசை காட்டும் சைகை பலகை (Sign Board) மற்றும்

மிளிரும் LED லைட்டுகள் (LED Blinkers), விழிப்புணர்வு ஏற்படுத்தும் டிஜிட்டல் பலகை (Awareness Scrolling Display) ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. மேலும் பாலத்தில் நான்கு இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாலத்தின் போக்குவரத்து காவலர்கள் தினமும் சுழற்சி முறையில் போக்குவரத்து பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் மேலே 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாகன ஒட்டிகள் மேம்பாலத்தில் 30கி.மீ. வேகத்திற்கு மிகாமல் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

எனவே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து விழிப்புடன் மேம்பாலத்தில் பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *