இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
உடனடியாக மத்திய அரசு கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் விஷ்ணுவர்த்தன், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments