திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பணியக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35) இவன் பிரபல ரவுடியாவன் இவன் அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரிமிளாவை பொது இடத்தில் வைத்து சுந்தர்ராஜ் தாக்கியுள்ளான்.
இதனால் பரிமளா சுந்தராஜூடன் கள்ளத்தொடரில் இருந்தது பலருக்கு வெளிச்சமானது. பின்னர் பரிமிளாவின் அண்ணன் கணேசன் மூர்த்தி ஆகியோருக்கும் இடையே கவுரவ பிரச்சினையாக மாறியது. இதனை தொடர்ந்து 12ம் தேதி இரவு கணேசமூர்த்தியின் மகன் வடிவேல் மற்றும் 17 வயது மகன் ஆகியோர் சுந்தர்ராஜிற்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர்.
அந்த போதையில் சுந்தரராஜ் சித்தப்பா வீட்டு மொட்டை மாடியில் படித்திருந்தபொழுது கணேசமூர்த்தி வடிவேல் மற்றும் 17 வயது சிறுவன், பரிமளா மகன் மாரிமுத்து ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சுந்தர்ராஜின் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசமூர்த்தி வடிவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் மாரிமுத்து மட்டும் தலைமறைவாக இருந்தான்.
இந்நிலையில் நேற்று திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மாரிமுத்து சரணடைந்தான். அவனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments