திருவல்லிக்கேணி சென்னை சேப்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
திருச்சி மாநகரில் 3 திரையரங்குகளில் இன்று நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சோனா மீனா திரையரங்கில் ரசிகர் மேளதாளத்துடன் உற்சாகத்துடன் கூடினர்.
திருச்சி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில், வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் உற்சாகத்துடன் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இத்திரைப்படம் சமூக நீதி திரைப்படம் ஆகும் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments