Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

50% விழுக்காடு மானியத்தில் கோழிக்குஞ்சுகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

2024-25-ம் ஆண்டில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38 ஆயிரத்து 700 பெண்களுக்கு ரூ.6 கோடியே 24 இலட்சத்து 20 ஆயிரம் செலவில் நாட்டின கோழிக்குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக் குஞ்சுகள் வீதம் 50 விழுக்காடு மானியத்தில் வழங்கும் திட்டம் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1400 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பயனாளி சொந்த செலவில் ரூ.3,200 செலவில் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுய சான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி இதற்கு முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளோர் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,சாதிச்சான்று நகல், கணவனால் கைவிடப்பட்டவர் அல்லது விதவை அல்லது வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, புகைப்படம் 2, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *