தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் சென்னையில் இருந்தபடி அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்பு கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வந்தார்.
இதன் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக சேலம் கோவை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு ஸ்டாலின் வருகை தருகிறார். நாளை ( 21.05.2021 ) மதியம் 01.30 மணிக்கு திருச்சிக்கு வரும் முதல்வர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர் திருவெறும்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கை வசதியுடன் கூடிய தனிமை சிகிச்சை மையத்தை பார்வையிட்டு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
இதற்கிடையில் பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான இடத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments