திருச்சி என்பது அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் மாநகரம். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தங்களுடைய முதற்கட்ட நடவடிக்கையினை திருச்சியில் இருந்து தான் தொடங்குவர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் திருச்சியின் பல கட்சியினர் மையம் கொண்டு தீவிர பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
Advertisement
இந்நிலையில் தமிழக முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று திருச்சிக்கு வர இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகரின் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமான பிளக்ஸ்,அலங்கார வளைவுகள் அதிமுக கொடிகளும் ஆங்காங்கே பறக்க விடப்படுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு நாளை பொதுக்கூட்டம் நடத்துவதற்காக திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பொதுக் கூட்டம் நடத்தும் ஒரு முக்கிய இடமாக அன்றைய காலகட்டத்தில் இருந்து வந்தது. அதைபோலவே எம்ஜிஆரின் சென்டிமென்டாக எம்ஜிஆர் சிலை சுற்றிலும் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியிலும், மார்க்கெட் புறத்திலும் காவல்துறையினர் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.நீதிமன்றத்தால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட பகுதி தென்னூர் உழவர் சந்தை பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Comments