திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக தமிழக மற்றுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மனை கோவிலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலில் உள்ள மூலவரை அம்மனை தரிசனம் செய்துவிட்டு கோவில் உள்பிரகாரத்தில் தங்க தேர் இழுத்தார்.
பின்னர் தங்கத் தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது துர்கா ஸ்டாலின் தீபாராதனை தொட்டு வணங்கினார். இந்நிகழ்வில் கோவில் இணை ஆணையர் கல்யாணி கோவில் பணியாளர்கள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments