திருச்சி சுப்பிரமணியபுரம்த்தில் மூன்று பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளது. அதில் ஒரு பேருந்து நிறுத்தம் சட்டமன்ற நிதியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அமைத்துள்ளார். மற்றொன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் ஒரு பேருந்து நிறுத்த நிழற்குடையை அமைத்துள்ளார்.
இவர் அமைத்த பேருந்து நிறுத்த நிழற்குடையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் ஆகிய நான்கு பேரின் புகைப்படங்கள் அதில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் மட்டும் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் மாநகர காவல் ஆணையர் காமனியிடம் புகார் மனு அளிக்க உள்ளார். யார் இந்த வேலையை செய்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முதல்வர் படத்தை மட்டும் கிழித்து அவமதிப்பு செய்தவர்கள் யார் என்பதை தற்போது போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments