சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு கட்சிகள் தங்களுடைய பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக களம் இறங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூரில் வருகின்ற 30ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Advertisement
இந்நிலையில் துறையூர்க்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு பிரச்சாரம் செய்யும் இடங்களை பார்வையிட திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி துறையூருக்கு சென்றுள்ளார்.
Advertisement
அப்போது துறையூருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி வருவதையடுத்து அவர் பின்னால் வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியில் 2 கார்கள் சேதம் அடைந்தது. மேலும் இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
முன்னதாக கண்ணனூர் கிராமத்தில் முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடத்தை பார்வையிட்டு முடித்துவிட்டு துறையூர் நோக்கிவரும்பொழுது கொத்தம்பட்டி அருகே அவர் பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் திருச்சி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய் ஆகியோரது கார்கள் விபத்தில் சேதமடைந்தன கட்சித் தொண்டர்கள் 4 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது மாவட்ட செயலாளர் கார் பின்னால் வந்த கட்சியினரின் கார்கள் ஒன்றுடன் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments