திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா நெடுவங்கோட்டை சேர்ந்தவர் கோபு (29). இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கௌதமி இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு குழந்தை உள்ளனர். தனது மூத்த மகனை வீட்டில் விட்டுவிட்டு இளைய மகன் மற்றும் குழந்தையுடன் கௌதமி தனது அக்காள் முத்துலட்சுமியுடன் சமயபுரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார்.
அப்போது தான் குளித்துவிட்டு வருவதற்காக குளியலறைக்கு செல்லும் முன் தனது அக்கா முத்துலட்சுமியிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றார். முடிமண்டபத்தின் அருகே குழந்தைகள் இருவரும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை துளசியபுரத்தைச் சேர்ந்த நீலாவதி (50) அங்கு அமர்ந்திருந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நீலாவதி நைசாக தூக்கிச் சென்று விட்டார்.
கௌதமி குளித்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தை காணாத கண்டு தனது அக்காவிடம் கேட்டார். அவரும் திகைத்து அருகில் இருந்தவர்களிடம் விசாரிக்கும் போது ஒரு பெண் தங்கள் குழந்தை ஒன்றை தூக்கிக்கொண்டு சென்றதாக தெரிவித்தார். கௌதமி உடனடியாக சமயபுரம் காவல் நிலையம் தனது குழந்தை காணவில்லை என புகார் செய்தார். உடனடியாக சமயபுரம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஓரு பெண் குழந்தையுடன் இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் வழியாக செல்வது தெரிய வந்தது. அதை வைத்து அந்த பெண்ணையும், குழந்தையும் தேடி வந்தனர். பின்னர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே குழந்தையுடன் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை காவல் ஆய்வாளர் சாந்தி பிடித்து கைது செய்தார். பின்னர் குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய 2 மணி நேரத்தில் கண்டு பிடித்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments