கார்த்திகை மாதம் பௌர்ணமி நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை திருவிழாவானது திருக்கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும், அதன்படி நேற்றுமுன்தினம் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலிலும், நேற்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட்டது,
தொடர்ந்து இன்றையதினம் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை எனும் பெருந்தீப விழா இன்றுநடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி நம்பெருமாள் காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனமண்டபத்தில் எழுந்தருளி, அங்கு திருமஞ்சனம் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார். பின்னர் இரண்டாவதுமுறை புறப்பாடாக கதிர் அலங்காரம் எனப்படும் மூலிகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி கார்த்திகை கோபுரத்தை வந்தடைந்தார்.
20அடி உயரத்தில் பணை ஒலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையை வலம்வந்து நம்பெருமாள் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகே எழுந்தருளிய பின்னர், கார்த்திகைதீப சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
பின்னர் நம்பெருமாள் நந்தவனம் வழியாக தாயார் சன்னதிக்குச் சென்று அங்கு திருவந்திகாப்பு செய்யப்பட்டு இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments