திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இதனை 100 வார்டுகளாக உயர்த்தும் வகையில், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு வட்டங்களைச் சேர்ந்த 27 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பட்டியலில் அதவத்தூர் ஊராட்சி இடம் பெற்றுள்ளது.
ஆதவத்தூர் ஊராட்சியானது அதவத்தூர், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, கொய்யாத்தோப்பு பாளையம், மேலப்பேட்டை, நெட்டச்சிக்காடு, நொண்டிதிருமன்காடு, தப்புக்கொட்டிக்காடு, அடைக்கன்காடு, சீத்தாக்காடு, குன்னுடையான்காடு, சந்தை, ஜெ.ஜெ.நகர், விநாயகபுரம் ஆகிய சிற்றூர்களை உள்ளடக்கியது.
இந்நிலையில் இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதி மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயர்வு, நூறு நாள் வேலைத் திட்டம் ரத்து போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என கூறி கடந்த திங்கட்கிழமை அன்று இந்த ஊரைச் சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மாநகராட்சி உடன் இணைக்கும் திட்டத்தை கண்டிக்கும் வகையில் சுதந்திர தினமான இன்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை அதவத்தூர் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கருப்பு கொடியை அகற்றினர்.
இதனை தொடர்ந்து அதவத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் தொடங்கியது. இதில் அதவத்தூர் பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments