திருச்சி மாவட்டம் நாகமங்கலம் அடுத்துள்ள மேல நாகமங்கலத்தை சேர்ந்த சிலர் நாராயணபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பிடம் அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது நாராயணபுரம் பகுதியை சேர்ந்த தமிழன் (26) என்ற வாலிபர் நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். இதற்கு மது அருந்து கொண்டிருந்தார் அண்ணாமலை என்பவர் தமிழனை தாக்கியுள்ளனர்.
இதை அறிந்த தமிழனின் அண்ணன் ராஜாங்கம் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் அண்ணாமலையிடம் சென்று எதற்காக எங்க தம்பியை அடித்தீர்கள் என கேட்டுள்ளனர். இதற்கு இரவு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று இரவு ராஜகுமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட அண்ணாமலை சமாதான பேச வருமாறு அழைத்துள்ளார். பின்னர் ராஜாங்கம் மற்றும் ராஜ்குமார் இருவரும் அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது 15 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் ராஜாங்கம் மற்றும் ராஜ்குமாரை சரமாரி தாக்கி உள்ளனர்.
அப்போது சண்டையை தடுத்து சென்ற முருகன் என்பவரின் மீதும் பயங்கர ஆயுதங்களை கொண்டு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த தமிழன், ராஜாங்கம், ராஜ்குமார் மற்றும் முருகன் ஆகிய நால்வரும் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நால்வர் மீது தாக்குதல் நடத்திய அண்ணாமலை, மாத்தூர் சங்கர், கிருஷ்ணா, யோகேஷ், மற்றும் சந்தன குமார் உட்பட 15 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நாராயணபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லை என்றால் நாளை நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளனர். இரண்டு ஊரை சேர்ந்த நபர்களுக்குள் அடிதடி அரிவாள் வெட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments