திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 60-வது வார்டு காஜாமலை பகுதியில் புதிய ரோபாட்டிக்ஸ் இயந்திர மூலம் பாதாள சாக்கடை மேன்ஹோலுக்குள் அடைப்பு சரி செய்யும் பணியினை சோதனை முறையில் நடைபெற்றதை மேயர் மு.அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டுகள் உள்ளடக்கி (Under Ground Drainage) புதை வடிகால் சாக்கடை இணைப்புகள் கொண்ட மாநகராட்சி ஆகும். இதில் புதைவடிகால் மேன்ஹோல் சாக்கடையில் அவ்வப்போது அடைப்புகள் ஏற்படுகின்றன இதனை மனித ஆற்றல் கொண்டு எடுக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு மாற்று வழியாக கழிவு நீர் பாதைகளில் அடைப்புகளை அகற்றுவதற்காக சில்ட் அகற்றும் சூப்பர் சக்சர் வாகனங்கள் மூலம் எடுக்கப்பட்டது. இதேபோல் சிறிய தெருக்களில் சூப்பர் சக்சர் வண்டியால் போக முடியாத காரணத்தால் புதிதாக ரோபாட்டிக்ஸ் இயந்திரத்தின் மூலம் மேன்ஹோலில் உள்ள அடைப்பைச் சரிசெய்யும் தானியங்கி ரோபாட்டிக்ஸ் சிறிய இயந்திரம்மூலம் சோதனை முறையில் 60வது வார்டு காஜாமலை பகுதியில் மண் அடைப்புகளை அகற்றியதை மேயர் மு. அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
துப்புரவு தொழிலாளர்களை புதைவடிகள் அடைப்புகள் சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தாதவாறு இந்த இயந்திரம் மூலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யப்படும் என மேயர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மண்டலத் தலைவர் துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், உதவி ஆணையர் சண்முகம், உதவி செய்ய பொறியாளர் வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments