திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நாமக்கல் மாவட்டம் முட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 3000 பேருக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 30 முட்டைகள் அடங்கிய ஒரு அட்டையை துப்புரவு பணியாளர்களுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்… கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 3000 பேருக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டு உள்ளது. நாளை முதலமைச்சர் திருச்சிக்கு வருகை தந்து கல்லனையை பார்வையிட உள்ளார். திருச்சியில் உள்ள வாய்க்கால் தூர்வாரிய விபரம் தான் தெரியும். தஞ்சாவூர் பற்றி எங்களுக்கு தெரியாது.
முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் எந்த இடத்திலும் சென்று பார்வையிடலாம். அனைத்து இடங்களும் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அவர்கள் அதை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முட்டை வழங்கிய பின் அங்கிருந்து அமைச்சர் சென்றபின் முட்டை பெறுவதற்காக சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்துக்கொண்ட முன் களப்பணியாளர்களால் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments