திருச்சி தேசிய கல்லூரியின் நூலகவியல் துறையில் நூலக வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை நிறைவு விழா தொடங்கியது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் 7 பேர் பயிற்சியில் பட்டரையில் (11.11.2024) முதல் (16.11.2024) வரை 6 நாட்கள் பயிற்சி பெற்றனர்.
இப்பயிற்சியில் நூலக மேலாண்மை, நூலக பகுப்பாய்வு, நூலக செயல்பாடு மற்றும் நூலகம் மென்பொருள் மேலாண்மை, மின் நூலகப் பயன்பாடு, மின் இதழ் பற்றிய பயன்பாடு குறித்து மாணக்கர்களுக்கு கற்பிக்கப்பட்டது. பயிற்சி பட்டறை நிறைவு விழா (15.11.2024) அன்று நடைபெற்றது.
இப்பயிற்சி பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நூலகவியல் துறை தலைவர் முனைவர் சுரேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் கா.ரகுநாதன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் இத்துறையின் நவீன தொழில்நுட்பத்திற்கு தகுந்தார் போல் மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தி கெள்ளுமாறு அறிவுறை வழங்கினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் கி.குமார் விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார். நூலக உதவியாளர் நூலக உதவி நூலகர் ராதா ஜெயலட்சுமி நன்றி உரை நகினார். தேசிய கல்லூரி பேராசிரியர்களும். தட்டச்சு பயிற்சியாளர் அன்புமணி நூலக உதவியாளர்கள் லட்சுமணன், களியமூர்த்தி, உமாமகேஸ்வரி, ஹரிஹரன் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments