Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கிளவுட் உற்பத்தி ஸ்டார்ட் அப் நிறுவனம் Frigate ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி திரட்டியது!

சென்னையை தளமாகக் கொண்ட கிளவுட் உற்பத்தி ஸ்டார்ட்அப் ஃப்ரிகேட், முதலீட்டாளர்களிடமிருந்து ,ரூ.1,35,0000 நிதி திரட்டியுள்ளது. இந்த  சுற்றில் முதலீட்டாளர்களில் ஏஞ்சல் முதலீட்டாளர் வேல் கன்னியப்பன், Zetwerk இன் நிறுவனர் ஸ்ரீநாத் ராமக்ருஷ்ணன்,   Mamaearth  அபிஷேக் ராஜ் பாண்டே, Bitscrunch இன் விஜய் பிரவின் மகாராஜன், SPK குழுமங்களின் பிரபு செங்கோடன், M2P Fintech நிறுவனர்கள். இப்போப்பையின் மோகன் மற்றும் ஜெய்குமார், சுந்தரராமன் ராமசாமி, (வில்கோசோர்ஸ் யுஎஸ் நிறுவனர்) மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.

 2021 இல் நிறுவப்பட்ட Frigate நிறுவனம் OEMகள், SMEகள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கான ஃபேப்ரிகேஷன், 3D பிரிண்டிங் மற்றும் CNC எந்திர சேவைகளை வழங்கும் சந்தை தளமாகும்.

தமிழினியன் (Frigate நிறுவனர்,தலைமை நிர்வாக அதிகாரி)

தமிழினியன் (FRIGATE நிறுவனர்& தலைமை நிர்வாக அதிகாரி) 

FRIGATE நிறுவனம் , ராஜ்கோட், அகமதாபாத், பெலகாவி, திருவனந்தபுரம், பாலக்காடு, கோலாப்பூர், ஔரங்காபாத், ஜாம்ஷெட்பூர், ஓசூர், திருச்சி, மதுரை, போன்ற அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் இருந்து உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களைத் தயாரிப்பதற்காக நிறுவனம் 150 SMEகளை தங்கள் தளத்தில் இணைத்துள்ளது. ஈரோடு, சேலம், இந்தூர், பிதாம்பூர், கோயம்புத்தூர், இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்துறை மாநிலங்களையும் உள்ளடக்கியது. மின்சார வாகனங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியவற்றுக்கான உலகளாவிய தேவையை வழங்குவதற்கு   பயன்படுத்த உள்ளோம்.

ஃப்ரிகேட்டின் OPTMAN தளம், வெளிப்படையான தன்மையோடு, உற்பத்தி இயந்திரங்களின் இருப்பை உணர்த்துவதால் நிறுவனங்கள் அதற்கேற்ப தங்கள் உற்பத்தியை முன்கூட்டியே திட்டமிட்டு, கையிருப்பை பராமரிக்கவும் உதவுகிறது.

இப்போது திரட்டி உள்ள நிதி மூலம் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு   உருவாக்க திட்டமிட்டுள்ளது வடிவமைப்பின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப இயந்திரங்களை பொருத்தும் வகையில் இவை அமைந்திருக்கும். நிறுவனத்தின் கிளை அலுவலகங்களை சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அது மட்டுமில்லாமல் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *